ஒரு கோடி தர்மம்! லாரன்சுக்கு மனசு வந்தது எப்படி!
தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு பகுதியை வாழ்நாள் முழுக்க அநாதை குழந்தைகளுக்காகவும், ஊனமுற்ற குழந்தைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவழிக்கும் நல்ல மனசுக்காரர் லாரன்ஸ்.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்காக அவர் நடிக்கவிருக்கும் கெட்டசிவா மொட்ட சிவா மற்றும் நாகா ஆகிய இரு படங்களுக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ஒரு கோடியை அப்படியே ஏழை மக்களுக்கு தருவதாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் 100 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இந்த நல்ல காரியத்தை செய்யப் போகிறாராம் அவர்.
எப்படி வந்தது இந்த மனசு? அவர் வாயாலேயே கேளுங்க…
என்னை வாழ வைத்த இந்த தாய்மார்களுக்காக நான் என்ன செஞ்சேன்? என்று. முந்தைய படம் பெரிய வெற்றியடைஞ்சுது. அப்பவே ஒரு கோடியை இந்த மக்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால் வெவ்வேறு காரணங்களால் முடியல. இந்த படம் பண்ணுறதுக்காக எனக்கு அட்வான்ஸ் தர்றேன்னு வேந்தர் மூவிஸ் சொன்னப்போ, இங்க தராதீங்க. இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் பங்ஷன் அன்னைக்கு கொடுங்கன்னு சொன்னேன். எல்லார் முன்னிலையிலும் அதை வாங்கி அப்படியே ஏழைகளுக்கு கொடுத்துடணும்னு நினைச்சேன். அதனால்தான் அப்படி என்றார்.இந்த பணம், முறையாக ஏழை மாணவர்களையும் கஷ்டப்படுகிறவர்களையும் சென்றடைய அருமையான திட்டத்தையும் வகுத்திருக்கிறார் லாரன்ஸ்.
keywords
பேஸ்புக் நல்லதா, கெட்டதா?
இரண்டு கோடி ரூபாய் விட்டுக் கொடுத்தார் தனுஷ்!
சமந்தாவின்…நல்ல மனசு
TAG
larance
motta siva ketta siva
Naga
One Crore
trust
Google+
Tumblr
No comments:
Post a Comment