Thursday, 27 August 2015

புதிய மருந்து கண்டு பிடிப்பு!- அரிய வகை மரபணு நோய்க்கு

அரிய வகை மரபணு நோய்க்கு-மருந்து! கண்டுபிடித்தது-சென்னை ஐஐடி!

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பிறந்து 6 மாத காலத்தில் அடையாளம் கண்டுவிட முடியும். அதாவது இந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள் மாதிரி வளர்ச்சியில்லாமல் குறைந்த வளர்ச்சியில் தான் காணப்படுவார்கள். அதாவது இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அனைத்து உறுப்புகளின் செல்களில் அமினோஅமில சிஸ்டைன்கள் தங்கி, அந்தந்த உறுப்புகளைப்பாதிக்க வைப்பதில் முன்னணியில் உள்ளது.

குறிப்பாக என்னதான் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அவர்கள் உடம்பில் சேராமல் சிறு நீருடன் கலந்து வெளியேறி விடும். குளுகோஸ், அமினோ அமிலம், பொட்டாசியம் மற்றும் உப்பு உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் வெளியேறி விடுகிறது. இதனால் அந்தக்குழந்தை வளர்ச்சியில்லாமல் இருப்பார்கள்.

மேலும் இந்தக் குழந்தைகளுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படும். வளர்ச்சித்தடைப் படும். எலும்புகள் முறையாகவும் வளராது, தளர்வாகக் காணப்படும். மேலும் பல பிரச்சனைகளும் வரும்.

சிஸ்டகான் என்ற மருந்தைச் சாப்பிட்டால் நோயின் தன்மை கூடாமல் இருக்கச் செய்ய முடியும். இந்த மருந்து தற்போது வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டுக் கொடுக்கப் படுகிறது. இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துச் செலவில் இந்திய சிஸ்டினோசிஸ் அறக்கட்டளை உதவி வருகிறது.

இந்தநிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், சிஸ்டினோசிஸ் அறக் கட்டளையுடன் சேர்ந்து இந்நோய்க்கு புதியமருந்து ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். இந்தப் புதிய மருந்திற்கு சிஸ்டோமைன் பிடார்டிரேட் எனப்பெயரிடப் பட்டுள் ளது.

விரைவில் இம்மருந்து குறைந்த விலையில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்தப் புதிய மருந்து கண்டு பிடிப்பால், சிஸ்டினோசிஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்!!!

மருந்துகளால் உடல்எடை அதிகரிக்கும். ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே உடல் எடையானது அதிக மாகும். தீராத ஒற்றைத்தலைவலி, மனஅழுத்தம் அல்லது வேறு வலிக்கு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது அந்தமருந்துகளே. ஸ்டீராய்டுகள், மனஅழுத்தம், வலிப்பு, ஒற்றை தலை வலி போன்றவைகளுக்கு சாப்பிடும் மருந்துகள், உடல்எடையை கண்டிப்பாக அதிகரிக்கச்செய்யும்.

சர்க்கரைநோய்க்கு மருந்தாக இருக்கும் இன்சுலின் மற்றும் வாய்வழி சாப்பிடும் சிலமாத்திரைகளும் மருந்துகளும் உடல்எடையை அதிகரிக்கச்செய்யும். ஆனால் எல்லா மருந்துகளும் உடல்எடை அதிகரிக்கும் காரணியெனஎண்ணி விடக்கூடாது. இதன் பாதிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பசியை தூண்டும் மாத்திரைகள்

சில மன அழுத்தத்தைக் குறைக்கும் (Anti-depressant) மருந்துகள், அதிகளவில் பசியைத்தூண்டும். அதனால் ஏற்படும் எடையதிகரிப்பை தடுக்க, ஒரு நல்ல மன நல மருத்துவரைச்சந்தித்து, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும் மருந்துகளான சைபான் (Zyban) மற்றும் வெல்புட்ரின் (Wellbutrin) போன்ற மருந்துகளைப் பரிந்துரைக்கச் சொல்லவும்.

தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரைகள்-மந்த நிலை உருவாக்கும் மாத்திரைகள்

அலர்ஜியைக்குறைக்கும் மருந்துகளில் உள்ள டைஃபென் ஹைட்ராமைன் (diphenhydramine) உடனடியாக தூக்கக்கலக்கத்தை ஏற்படுத்தும். இருமல் டானிக் போலவே, அலர்ஜி மாத்திரை களும் மந்த நிலைக்குத்தள்ளி விடும். ஆகவே மருத்துவரிடம் ஆலோசனைசெய்து, சைர்டெக் போன்ற மற்றொரு ஆன்டி ஹிஸ்டாமைன் (anti-histamine) சாப்பிட்டால், தூக்கக்கலக்கம் அதிகமாக இருக்காது.

எடை அதிகரிக்கும் மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள் எடையை அதிகளவில் கூட்டி விடும். அவ் வகை மாத்திரைகள் உடலில் வீக்கத்தைத்தேக்கி வைக்கும் தன்மையைப் பெற்ளு இருப்பதால், எடையதிகரிப்பு ஏற்படும். அதனால் குறைவான ஈஸ்ட்ரோஜென் (low-estrogen) அல்லது ஃப்ரோஜெஸ்டின் (progestin) மாத்திரை களை எடுத்துக் கொள்ளலாம்.

டைஃபென்-ஹைட்ராமைன் (diphen-hydramine), சோமிநெக்ஸ் (Sominex) அல்லது டைலினோல் (Tylenol) போன்ற தூக்க மாத்திரை கள் எடை அதிகரிப்புக்குக்காரணாமாக விளங்குகிறது. இதனைப்பற்றி உங்கள் மருத்துவரிடம் விரிவாகக்கலந்து ஆலோசித்துப“ பரிந் துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒற்றைத்தலை வலி மருந்துகளில் இருக்கும் ஓலியன்சிபைன் (Oleanzipine) மற்றும் சோடியம் வால்ப்ரோட் (sodium valproat) உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். அதனால் டேபகென் (depakene) மற்றும் டேபகோட் (depakote) போன்ற மருந்து களை தவிர்க்கவேண்டும்.

ஸ்டிராய்டுகள் பசியைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும். உடல் எடைக்கூட வேண்டும் என்றால், அதிகளவு ஸ்டிராய்டுகளை சாப்பிடலாம். இவை உடலில் தண்ணீரை தேக்கி, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மருத்துவரை குறிப்பாக எண்.எஸ்.ஏ.ஐ.டியை (NSAID) பரிந்துரைக்கச் சொல்லவும். உடலில் உள்ள கடுமையான வலி ஏற்படுவதனால், மருத்துவர் ப்ரெட்னிசோன் (prednisone) போன்ற ஸ்டீராய்டுகளைப் பரிந்துரைப்பர். இதை தேவையான அளவு சாப்பிட்டு, நன்றாக உடற் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.




No comments:

Post a Comment